கேள்விகளை கண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்.? – பிரியங்கா காந்தி
ஜனநாயகத்தில் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என பிரியங்கா காந்தி ட்வீட்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களிடம் அமலாக்கத்துறை 3-வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டது. இதற்க்கு எதிராக காங்கிரசார் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் கைது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து பிரியங்கா காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமரே இந்த MPக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள். பணவீக்கம், வேலை இல்லா திண்டாட்டம் குறித்த கேள்விகள், மக்களின் கேள்விகள்.
ஆனால் நீங்களோ பெண் MPக்களின் ஆடைகளை கிழித்து, அவர்களை தரையில் இழுத்து செல்வது கொடூரத்தின் உச்சம். ஜனநாயகத்தில் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளுக்கு செவி சாய்க்க வேண்டும். கேள்விகளை கண்டு ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்.?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
प्रधानमंत्री जी, ये सांसद जनता द्वारा चुनकर भेजे गए हैं। महंगाई, बेरोजगारी के मुद्दों पर सवाल जनता के सवाल हैं।
सवाल पूछने पर महिला सांसदों के कपड़े फाड़ना, उन्हें घसीटना हद दर्जे की क्रूरता है। लोकतंत्र में आपको मुद्दों पर सवाल तो सुनने पड़ेंगे। सवालों से इतना घबराए क्यों हैं? pic.twitter.com/5I21RSpFqk
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 27, 2022