Categories: இந்தியா

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

Published by
murugan

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ளது. மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்று தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான கருத்துக் கணிப்புகள் வரத்தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளில், ராஜஸ்தானில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று தெரிகிறது. அதேசமயம் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும்  மத்திய பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்: 

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின்படி, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 62-85 இடங்களும், பாஜக 100-122 இடங்களைப் பெறலாம் எனவும் மற்ற கட்சிகளுக்கு 14-15 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, ராஜஸ்தானில் பாஜகவுக்கு 80-90 இடங்களும், காங்கிரசுக்கு 94-104 இடங்களும், மற்றவர்களுக்கு 14-18 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸ் 18 இன் கருத்துக்கணிப்பின்படி ராஜஸ்தானில் பாஜக 111 இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் 74 இடங்களில் வெற்றிபெறும் எனவும் மற்றவர்களுக்கு 14 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 200 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன பெரும்பான்மை எண்ணிக்கை 100 ஆகும்.

மத்தியப் பிரதேசம் மாநிலம்: 

ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பு மத்தியப் பிரதேசத்தில் பாஜக 118-130 இடங்களையும், காங்கிரஸ் 97-107 இடங்களையும், மற்றவர்கள் 0-2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 0, சமாஜ்வாதி கட்சி 0 கைப்பற்றுவார்கள் என்று கணித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 118-130 இடங்களையும், காங்கிரஸ் 97-107 இடங்களையும், மற்றவர்கள் 0-2 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 0, சமாஜ்வாதி கட்சி 0 கைப்பற்றுவார்கள் என்று கணித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன பெரும்பான்மை எண்ணிக்கை 116 ஆகும்.

சத்தீஸ்கர் மாநிலம்:

இந்தியா டிவி -சிஎன்எக்ஸ் கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம். மாநிலத்தில் காங்கிரஸ் 46 முதல் 56 இடங்களில் வெற்றிபெறும் எனவும், அதே நேரத்தில் பாஜக 30 முதல் 40 இடங்களில் வெற்றிபெறும் எனவும், இதில் 3 முதல் 5 இடங்களில் மற்றவர்கள் வெற்றிபெறும் எனவும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆஜ் தக் மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 36-46 இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் எனவும், மற்றவர்கள் மற்றும் சுயேச்சைகள் 1-5 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை எண்ணிக்கை 46 ஆகும்.

தெலுங்கானா மாநிலம்: 

ஜன் கி பாத்  கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் காங்கிரஸ் 58-68 இடங்களையும், பிஆர்எஸ் 46-56 இடங்களையும், பாஜக 4-9 இடங்களையும் மற்றவர்களுக்கு 0 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, தெலுங்கானாவில் காங்கிரஸ் 63-79 இடங்களையும், பிஆர்எஸ் 31-47, பாஜக 2-4  மற்றவர்களுக்கு 0 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 119 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை எண்ணிக்கை 60 ஆகும்.

மிசோரம் மாநிலம்: 

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின்படி,  ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 10-14 இடங்களில் வெற்றிபெறும் எனவும்,  எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 15-25  இடங்களில் வெற்றிபெறும் எனவும், காங்கிரஸ் 5-9 இடங்களில் வெற்றிபெறும் எனவும், பாஜக 0-2 இடங்களில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 14-18 இடங்களிலும், எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 12-16  இடங்களிலும், காங்கிரசுக்கு 8-10 இடங்களிலும், பாஜக 0-2 இடங்களிலும் , மற்றவர்கள் மற்றும் சுயேச்சைகள் 12-16 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோராமில் 40 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மை எண்ணிக்கை 21 ஆகும்.

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

58 minutes ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

1 hour ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

2 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

2 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

3 hours ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

4 hours ago