மிசோராமில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

mizoram elections

நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதில் மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதனால், இந்த 4 மாநில சட்டமன்ற தேர்தல் பதிவான வாக்குகள் மட்டுமே நேற்று நடைபெறாது. அதில், நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்தவகையில்,  ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக்கொண்ட பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறது என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், கருது கணிப்பு எல்லாத்தையும் தவிடு பொடியாகியது பாஜக.

பாஜக வெற்றி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்..!

இந்த நிலையில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை தொடர்ந்து, இன்று  மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டமன்றத்துக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரமில் 75.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில்தற்போது ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணியை (MNF) வீழ்த்தி ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்தடுத்த இடங்கள் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகின.  MNF, ZPM மற்றும் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், பாஜக தற்போது 23 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயல்.! 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இதனால் மொத்தம் 16 பெண்கள் உட்பட மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த சூழல் மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் அங்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மிசோரமில் தற்போது மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதன் தலைவர் ஜோரம்தங்கா முதல்வராக உள்ளார்.

மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மேலும், 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது, ZPM 2 , ஆளும் MNF (Mizo National Front), பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்