கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி என்று கணித்த பைரவா நாய்
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அடுத்த முதல்வர் யார்?
இந்த நிலையில் மாண்டியாவை சேர்ந்த கோபி என்பவர் பைரவா என்ற நாயை வளர்த்து வருகிறார். கால பைரவேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் சிறப்பு பூஜை செய்து மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று அந்த நாயிடம் கேட்டுள்ளார்.
அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகிய மூன்று பேர் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் குமாரசாமியின் புகைப்படத்தை வாயில் கவ்வியவாறு பைரவா என்ற நாய் வந்துள்ளது. இதனால் அடுத்த முதல்வர் குமாரசாமி என்று அந்த நாய் கணித்துள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…