கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்..? டெல்லி விரைகிறார் சித்தராமையா..!

Siddaramaiah

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு செல்கிறார்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

இதனையடுத்து, மாநிலத்தின் முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதங்கள் நீடித்து வந்தன. கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என நேற்றிரவு 2 மணி வரை நீடித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா சற்று நேரத்தில் டெல்லிக்கு செல்லவிருக்கிறார். சித்தராமையா காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார்.

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முதல்வர் யார் என்ற முடிவை தலைமையிடம் விட்டுவிட்டோம், டெல்லி செல்வதற்கு இன்னும் முடிவு எடுக்கவில்லை. முதலமைச்சர் பதவி குறித்து, மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi