பாட்டு கேட்டு கொண்டிருந்த சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை.!

Default Image

உத்தரகாண்ட மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் என்ற பகுதியில் 13 வயது சிறுமி ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுத்தை அந்த சிறுமியை கடித்துக் கொன்றது.

நைனிடால் மாவட்டத்தில் குமாவோன் வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகன் என்ற பகுதியை சேர்ந்தவர் மம்தா இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் இவரது வீட்டிற்கு வெளியே கால்வாய் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ஹெட் போன் மூலம் பாடல்கள் கேட்டு இருந்தார், திடீரென  அங்கு வந்த ஒரு சிறுத்தை சிறுமி மம்தா வை கடுமையாக தாக்கி காட்டிற்குள் தூக்கிச் சென்றது.

இதுகுறித்து உடனடியாக அந்த கிராமத்தினர் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விரைந்து வனப்பகுதிக்கு சென்றனர், வனத் துறையினர் வனப்பகுதிக்கு சென்று பார்க்கும்பொழுது கீழே சிறுமியின் ஹெட்போன் மற்றும் சீப்பு கிடந்ததை பார்த்த உடன் சிறுமி பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது சிறுத்தை வந்துள்ளது எனவும், அதனால் தான் சிறுத்தை வந்த சத்தம் கூட சிறுமிக்கு கேட்கவில்லை என்றும் யோசித்து உள்ளனர் .

இந்த நிலையில் அதன் பிறகு சுற்றி முற்றி பார்த்த பிறகு புதருக்குள் சிறுமியின் உடலை வனத் துறையினர் பார்த்தனர், அதன் பிறகு  உடலை மீட்டனர். மேலும் சிறுமியை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க இரண்டு குண்டுகளையும் ஏழு கேமராக்களையும் வனத்துறையினர் வைத்துள்ளனர்.

மேலும் சிறுமியைக் கொன்ற சிறுத்தை திரும்பவும் அந்த கிராமத்திற்கு வந்துள்ளது , வனத்துறையினர் வைத்த இருந்த வலையில் சிக்கும் நிலையில் இருந்த சிறுத்தை அங்கிருந்த கிராம மக்கள் சத்தம் எழுப்பியதால் அந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் தப்பி விட்டது, மேலும் இதனால் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் முடியாமல் போனது தொடர்ந்து சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் மிகவும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள் .

இந்த நிலையில் இந்த சிறுமி கொல்லப்பட்டதுடன் சேர்த்து இந்தப் குமாவோன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் சிறுத்தைகளால் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் மேலும் இந்த சிறுமியின் உடல் பரிசு பிரேத பரி சோதனைக்கு பின்னர் நேற்று உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டுள்ளது, சிறுமியின் குடும்பத்திற்கு மாநில வனத் துறையி லிருந்து ரூ.3 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ .90,000த்துக்கான காசோலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்