கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது.
திடீரென அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் குறித்து துப்பு கொடுத்தால், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளது. மேலும் ஹியூமன்இ சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற தனியார், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்கும் நபருக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்டும் என அறிவித்துள்ளது.
இதனிடையே கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யானை உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…