“யார் இந்த எடியூரப்பா” – கர்நாடக மாநில அரசியல் பயணம் சிறுபார்வை !

Default Image

கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியில் 1943 ம் ஆண்டு பிறந்தவர் B.S.எடியூரப்பா. இளமையிலே அரசியல் ஈடுபாடு கொண்ட எடியூரப்பா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக இருந்து வந்துள்ளார்.தொடர்ந்து, நாட்டில் அவசர நெருக்கடி அமலில் இருந்த காலங்களில் மக்களுக்கான பொது பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

 

 

அரசியலில் பெரும் தலைவராக உருவான எடியூரப்பா 1984 ம் ஆண்டு கர்நாடக மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்பு, 1994 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதி தேர்தலில் முதன் முதலில் எம்.எல்.ஏ வாக தேர்வுசெய்யட்டார். தொடர்ந்து 3 சட்டமன்ற உறுப்பினராக இருந்துவந்த எடியூரப்பா 2006 ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியில் இருந்து கர்நாடக மாநில துணை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.அப்போதும் முதல்வராக குமாரசாமி தான் இருந்து வந்தார்.

கூட்டணி ஒப்பந்தம் படி, 2007 ம் ஆண்டு கர்நாடக முதல்வரனார் எடியூரப்பா. தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையாகும். கூட்டணி நீடிக்காததால் 6 நாட்கள் மட்டும் முதல்வர் பதவியில் இருந்தார்.

பின்னர், 2008 ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 3 ஆண்டுகள் பதவியில் இருந்த எடியூரப்பா 2010 ம் ஆண்டு சுரங்கம் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் இரண்டாம் முறை முதல்வர் பதவி பறிபோனது. இந்த முறை பாஜக 3 ஆண்டுகள் 63 நாட்கள் பதவியில் இருந்துள்ளது.

 

2011 ம் ஆண்டு கர்நாடகா ஜனதா தளம் என்ற தனி கட்சியை ஆரம்பித்த எடியூரப்பா 2014 ம் ஆண்டு அந்த கட்சியை கலைத்து மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்க்கு ,மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்ததும் ஒரு காரணமாய் பார்க்கப்படுகிறது.

2018 ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 இடங்களை கைப்பற்றியது. ஆனால், ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியுற்றார். இதனால் 7 நாட்களில் முதல் பதவியை விட்டு விலகினார்.

 

 

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் குமாரசாமி முதல்வராக கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் ராஜினாமா கடிதத்தால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியை இழந்தார் குமாரசாமி. இதையடுத்து, 105 தொகுதிகளை கொண்ட பாஜக அரசு ஆட்சியில் கைப்பற்றி இருக்கிறது. முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக பதவியேற்று இருக்கிறார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்