ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வியூகங்களை வகுத்து, ஒருபக்கம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மறுபக்கம் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்று, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாஜக போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டுள்ளார்.
ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? பின்னணியில் பாஜக மாநில தலைவரா? ஜோதிமணி எம்.பி கேள்வி!
அப்போது பேசிய அவர், நாட்டின் செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது யார் கைகளுக்கு செல்கிறது என்பது கேள்வியாக உள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்பி பிக்பாக்கெட் அடிப்பது போல் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தொழிலதிபர் அதானி பணத்தை எடுக்கின்றனர். அதாவது, பிக்பாக்கெட்காரர்கள் ஒருவரின் பாக்கெட்டில் பணம் எடுக்க விரும்பினால், முதலில் அவர்கள் செய்வது கவனத்தை திசை திருப்புவதுதான்.
ஒரு பிக்பாக்கெட் செய்பவர் முன்பக்கத்திலிருந்து வந்து கவனத்தை திசை திருப்புகிறார். மற்றொருவர் பின்னால் நின்று பாக்கெட்டுகளிலிருந்து எடுக்கிறார். 3வது ஒருவர் தேவைப்படும் போது மிரட்டுகிறார். இதேபோல் தான் பிரதமர் கவனத்தை திசை திருப்புகிறார். அதானி பாக்கெட்டுகளை எடுக்கிறார். அமித்ஷா லத்தியை பயன்படுத்துகிறார் என விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் ‘சாலை பயணம்’ தோல்வி.! ராஜஸ்தான் முதல்வர் கடும் விமர்சனம்.!
மேலும், முன்பெல்லாம் இந்திய அரசு நாட்டு இளைஞர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது, நீங்கள் நாட்டைக் காப்பாற்றினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்போம் என்று. ஆனால், இப்போது மோடி அக்னிவீரை கொண்டு வந்துள்ளார், அதில் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும்.
ஏனென்றால், ராணுவத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்ட பணம் முழுவதையும் அதானிக்கு பிரதமர் மோடி வழங்கி விட்டார் எனவும் குற்றச்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய ராகுல், நாம் அனைவரும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்கிறோம், ஆனால் இந்த ‘பாரத மாதா’ யார்?, ‘பாரத மாதா’ என்பது இந்த நாட்டு மக்கள்தான். ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லும் போது, நாட்டு மக்களையும், உங்கள் பெற்றோர்களையும், அவர்களின் பெற்றோர்களையும், அதாவது அனைவரையும் பாராட்டுகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…