தமிழகத்தின் புதிய டிஜிபி யார்…? டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!

Published by
லீனா

டெல்லியில் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. 

தமிழகத்தின் 29-வது சட்ட ஒழுங்கு டிஜிபி-யான திரிபாதி அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் வரும் 30ஆம் தேதியுடன்  ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், சீனியாரிட்டி அடிப்படையில் தான் டிஜிபி தேர்தெடுக்கபட வேண்டும் என்பது விதி. அதனடிப்படையில், திரிபாதிக்கு அடுத்த சீனியாரிட்டி பட்டியலில், 1987-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளான எம்.கே.ஜா, சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, பிரதிப் வி பிலிப் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் 60 வயதை எட்டியதால், எம்.கே.ஜா ஜூலை மாதமும், பிரதிப் வி பிலிப் செப்டம்பர் மாதமும் ஓய்வுபெறுகின்றர். சைலேந்திரபாபு மற்றும் கரன்சின்ஹா அடுத்த ஆண்டு ஒய்வு பெறுகின்றனர். அந்த வகையில், சைலேந்திரபாபு மற்றும் கரன்சின்ஹா இருவரும் சீனியாரிட்டி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

இதனையடுத்து, சஞ்சய் அரோரா 1988-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். சென்னையில் உயர்பதிவிகளை வகித்த இவர், தற்போது காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வருகிறார். தற்போதைய நிலையில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி கரன்சின்ஹா மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வரும் சஞ்சய் அரோரா ஆகிய மூன்று பேரில் ஒருவர் தமிழ்நாடு புதிய டிஐபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில், தமிழகத்திற்கு புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 30-வது டிஜிபி யார் என்பதை தேர்வு செய்ய, மத்திய தேர்வாணைய குழுவும், உள்துறை அமைச்சகமும் நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
லீனா
Tags: dgbtribathi

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

11 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

30 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

10 hours ago