ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் யார் ? போட்டியில் இருக்கும் தமிழக ஐபிஎஸ் அதிகாரி!

Default Image

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கான போட்டியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் இருக்கிறார்.

கடந்த 6 ம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக இருப்பதால் அங்கு ஆளுநர் தேவையில்லை.

ஜம்மு காஷ்மீர் பகுதியளவு சட்டப்பேரவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு துணை நிலை ஆளுநர் பதவி இருக்கும். மேலும், மத்திய அரசின் கீழ் நேரடியாக செயல்படும் என்பதை துணைநிலை ஆளுநர் பதவி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆளுநராக இருக்கும் சத்யபால் சாதிக் மீண்டும் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்பதால் புதிதாக துணைநிலை ஆளுநராக இரண்டு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

விஜயகுமார் ஐபிஎஸ் – மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த இவர் ஆளுநரின் ஆலோசராகவும் இருந்து வந்தார். தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் காவல்துறையில் பல்வேரு பொறுப்புகளில் இருந்துள்ளார். காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பதற்கு இவரின் பங்கு முக்கியமானது.

காஷ்மீருக்கான மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதியான தினேஸ்வரர் சர்மா என்பவரும் துணை நிலை ஆளுநர் போட்டியில் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்