உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில்பாஜக அமோக வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வியை சந்தித்தார். இதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில், தர்மேந்திர பிரதான் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதி டேராடூன் செல்லவுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு மறுநாள் உத்தரகாண்டில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறலாம் என்றும், அதில் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று மார்ச் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் பட்டியலில் புஷ்கர் சிங் தாமி, தன் சிங் ராவத், சத்பால் மகராஜ், ரிது கந்தூரி, கணேஷ் ஜோஷி உள்ளிட்ட பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன என கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் புஷ்கர் தாமி தோல்வியடைந்தாலும், பல எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். உத்தரகாண்டில், புஷ்கர் சிங் தாமிக்காக 6 எம்எல்ஏக்கள் தாங்கள் வென்ற இடங்களில் இருந்து ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக பாஜக தலைவர்களே கூறி வருகின்றனர். ஆனால், இறுதி முடிவை மத்திய தலைமைக் குழுதான் எடுக்க வேண்டும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…