கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை யார்…?
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் முதலமைச்சராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார் எடியூரப்பா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்தார். பாஜகவை பொருத்தவரையில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.
எடியூரப்பா அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்பதாகவே இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பின் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதன்படி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை எடியூரப்பா அவர்கள் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பசவராஜ் பொம்மை அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
யார் இந்த பசவராஜ் பொம்மை..?
கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கர்நாடக மாநில உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை கர்நாடகா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜகவில் பசவராஜ்..!
யார் இந்த பசவராஜ் பொம்மை..?
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.ஆர்.பொம்மையின் மகன்தான் பசவராஜ் பொம்மை. இவருக்கு வயது 61. இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988 -1989 இல் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இந்த நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரின் மகன் முதலமைச்சராக பதவி ஏற்பது இது இரண்டாவது முறை ஆகும். ஏற்கனவே கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எச்.டி.தேவ கவுடாவின் மகன் எச்.டி.குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எடியூரப்பாவின் இடத்தை நிரப்பிய பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை பதவியேற்பு..!
பசவராஜ் பொம்மை கழுத்தில் காவி துண்டுடன், ராஜ்பவனில் முதலமைச்சராக பதவியேற்றார். இவருக்கு, ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல் எடியூரப்பா உட்பட, பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…