கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், கார்கேவுடன் டி.கே. சிவகுமார் சந்திப்பு.
டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சந்தித்துள்ளார். கர்நாடகாவில் யார் அடுத்த முதலமைச்சர் என சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இந்த சந்திப்பானது நடந்து வருகிறது. முதலமைச்சரை மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுபோல எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு தலைமையிடம் சமர்பித்திருந்தது மேலிட பார்வையாளர் குழு. இந்த நிலையில், முதலமைச்சர் போட்டியில் உள்ள இரு தலைவர்களும் கார்கேவை சந்தித்து பேசும் நிலையில், முதல்வர் யார் என்பது இன்று இறுதியாக வாய்ப்பு உள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவை டி.கே. சிவகுமார் சந்தித்து பேசிய நிலையில், சித்தராமையாவும் சந்தித்து பேச உள்ளார்.
மேலும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது குறித்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே சிவக்குமாருடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இவ்விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…