பஞ்சாபில் வெல்ல போவது யார்..? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ..!
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில், உ.பி-யில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் 117 தொகுதிகளில், ஆம் ஆத்மி : 76 – 90, காங்கிரஸ் : 19 – 31, பாஜக கூட்டணி : 1 – 4, சிரோமணி அகாலி தளம் : 7 – 11, பிற : 0 – 2 போன்ற இடங்களை பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.