வாகை சூடப்போவது யார்.. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!

Default Image

543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். இதன் முடிவுகளை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

  • காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்தின்படி, பாஜக 75 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 8 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
  • காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார்.
  • அருணாச்சல பிரதேசம் மேற்கு மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான கிரண் ரிஜிஜு 4154 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
  • காலை 8.52 மணி வரை தேர்தல் ஆணையத்தின் ஆரம்ப நிலைகளின்படி, பாஜக 63 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
  • 4000 வாக்குகள் பெற்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலையில் இருக்கிறார்.
  • வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை இருக்கிறார்.
  • நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னிலையில் இருக்கிறார்.
  • உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் இருக்கிறார்.
  • கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இருக்கிறார்.
  • ஸ்ரீபெரும்புதூரில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுள்ள டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் இருக்கிறார். நாம் தமிழர், தமாகா வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
  • காலை 8.05 நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்