C.B.I இயக்குனர் யார்…? இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை….
புதிய C.B.I இயக்குனரை தேர்வு செய்வது குறித்து மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
C.B.I இயக்குனரை கட்டாய விடுப்பு அளித்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அளித்ததை அடுத்து மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற அலோக் வர்மா CBI பொறுப்பில் இருந்து தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் அலோக் வர்மா.இதையடுத்து புதிய சிபிஐ இயக்குநர் யார் என்று தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் பட்டியலில் சுபோத்குமார் ஜெய்ஸ்வால், ஓ.பி.சிங், ஒய்.சி.மோடி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.இந்த பெயர் பட்டியலில் உள்ள பெயர்களை சிபிஐ புதிய இயக்குநராக பிதரமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லியில் சிபிஐ க்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் மூன்று நபர் கொண்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் எந்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தேர்வுக்குழு கூட்டம் மீண்டும் நடைபெற இருக்கிறது.