தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகி உள்ள நிலையில்,இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? என்று சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி,இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் ,சீரம் நிறுவனம் , ஃபைசர் நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்து உள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகின்றன.இதனிடையே அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.ஆகவே இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டிற்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைக்காத நிலையில், அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.இந்தியர்களை ”கினி எலிகள்” போல சோதனைக்கு உட்படுத்தப் போகிறார்களா என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…