மோடி 3.O: யாருக்கு என்ன அமைச்சகம்? அமைச்சர்கள் முழு பட்டியல்!
மோடி 3.O: நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-வது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். கடந்த ஞாற்றுக்கிழமை மாலை அன்று மோடி பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது, உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு பிரதமருக்கு இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த பதவியேற்பு விழாவில் அவருடன் இணைந்து 71 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்யப்பட்டது.
யாருக்கெல்லாம் எந்தெந்த அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான முழு பட்டியல் :
- பிரதமர் – நரேந்திர மோடி
உள்துறை அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – அமித் ஷா
- மாநில அமைச்சர் – நித்யநாத் ராய், பாண்டி சஞ்சய் குமார்
ஒத்துழைப்பு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – அமித் ஷா
- மாநில அமைச்சர் – கிரிஷன் பால், முரளிதர் மொஹோல்
பாதுகாப்பு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ராஜ்நாத் சிங்
- மாநில அமைச்சர் – சஞ்சய் சேத்
வெளியுறவு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – எஸ் ஜெய்சங்கர்
- மாநில அமைச்சர்கள் – கீர்த்திவர்தன் சிங், பபித்ரா மார்கெரிட்டா
நிதி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – நிர்மலா சீதாராமன்
- மாநில அமைச்சர் – பங்கஜ் சவுத்ரி
கார்ப்பரேட் விவகார அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – நிர்மலா சீதாராமன்
- மாநில அமைச்சர் – ஹர்ஷ் மல்ஹோத்ரா
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – நிதின் கட்கரி
- மாநில அமைச்சர் – அஜய் தம்தா, ஹர்ஷ் மல்ஹோத்ரா
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஜேபி நட்டா
- மாநில அமைச்சர்கள் – அனுப்ரியா படேல், பிரதாப்ராவ் கணபத்ராவ் ஜாதவ்
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஜேபி நட்டா
- மாநில அமைச்சர் – அனுப்ரியா படேல்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – மன்சுக் மாண்டவியா
- மாநில அமைச்சர் – ரக்ஷா நிகில் காட்சே
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – மன்சுக் மாண்டவியா
- மாநில அமைச்சர் – ஷோபா கரந்த்லாஜே
உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – சிராக் பாஸ்வான்
- மாநில அமைச்சர் – ரவ்னீத் சிங்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
- மத்திய அமைச்சர் -சிவராஜ் சிங் சவுகான்
- மாநில அமைச்சர்கள் – ராம்நாத் தாக்கூர், பகீரத் சவுத்ரி
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – சிவராஜ் சிங் சவுகான்
- மாநில அமைச்சர்கள் – டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, கமலேஷ் பாஸ்வான்
மின்சார அமைச்சகம்
- மத்திய அமைச்சர் -மனோகர் லால் கட்டார்
- மாநில அமைச்சர் – ஸ்ரீபாத் நாயக்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – மனோகர் லால் கட்டார்
- மாநில அமைச்சர் – டோகன் சாஹு
சுற்றுலா அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – கஜேந்திர சிங் ஷெகாவத்
- மாநில அமைச்சர் – சுரேஷ் கோபி
கலாச்சார அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – கஜேந்திர சிங் ஷெகாவத்
- மாநில அமைச்சர் – ராவ் இந்தர்ஜித் சிங்
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – அஸ்வினி வைஷ்ணவ்
- மாநில அமைச்சர் – எல்.முருகன்
ரயில்வே அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – அஸ்வினி வைஷ்ணவ்
- மாநில அமைச்சர் – வி சோமண்ணா
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – அஸ்வினி வைஷ்ணவ்
- மாநில அமைச்சர் – ஜிதின் பிரசாத்
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
- மத்திய அமைச்சர்: கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு, முரளிதர் மோஹோல்
கல்வி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – தர்மேந்திர பிரதான்
- மாநில அமைச்சர் – சுகந்தா மஜும்தார். ஜெயந்த் சவுத்ரி
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – அன்னபூர்ணா தேவி
- மாநில அமைச்சர் – சாவித்ரி தாக்கூர்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – பூபேந்திர யாதவ்
- மாநில அமைச்சர் – கீர்த்திவர்தன் சிங்
ஜல் சக்தி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – சிஆர் பாட்டீல்
- மாநில அமைச்சர்கள் – வி சோமன்னா, ராஜ் பூஷன் சவுத்ரி
பாராளுமன்ற விவகார அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – கிரண் ரிஜிஜு
- மாநில அமைச்சர்கள் – எல் முருகன், அர்ஜூன் ராம் மேக்வால்
சிறுபான்மை விவகார அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – கிரண் ரிஜிஜு
- மாநில அமைச்சர் – ஜார்ஜ் குரியன்
கனரக தொழில்துறை அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஹெச்.டி.குமாரசாமி
- மாநில அமைச்சர் – பூபதி ராஜு சீனிவாச வர்மா
எஃகு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஹெச்.டி.குமாரசாமி
- மாநில அமைச்சர் – பூபதி ராஜு சீனிவாச வர்மா
தகவல் தொடர்பு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஜோதிராதித்ய சிந்தியா
- மாநில அமைச்சர் – டாக்டர் சந்திரசேகர் பெம்மாசானி
வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சு
- மத்திய அமைச்சர் – ஜோதிராதித்ய சிந்தியா
- மாநில அமைச்சர் – சுகந்தா மஜும்தார்
ஜவுளி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – கிரிராஜ் சிங்
- மாநில அமைச்சர் – பபித்ரா மார்கெரிட்டா
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – பிரஹலாத் ஜோஷி
- மாநில அமைச்சர் – பி.எல்.வர்மா, நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – பிரஹலாத் ஜோஷி
- மாநில அமைச்சர் – ஸ்ரீபாத் நாயக்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஹர்தீப் சிங் பூரி
- மாநில அமைச்சர் – சுரேஷ் கோபி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஜிதன் ராம் மஞ்சி
- மாநில அமைச்சர் – ஷோபா கரந்த்லாஜே
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – லலன் சிங்
- மாநில அமைச்சர் – எஸ்பி சிங் பாகேல்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணை
- மத்திய அமைச்சர் – லலன் சிங்
- மாநில அமைச்சர் – எஸ்பி சிங் பாகேல், ஜார்ஜ் குரியன்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – பியூஷ் கோயல்
- மாநில அமைச்சர் – ஜிதின் பிரசாத்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – சர்பானந்தா சோனோவால்
- மாநில அமைச்சர் – சாந்தனு தாக்கூர்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – டாக்டர் வீரேந்திர குமார்
- மாநில அமைச்சர்கள்: ராம்தாஸ் அத்வாலே, பி.எல்.வர்மா
பழங்குடியினர் விவகார அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஜுவல் ஓரம்
- மாநில அமைச்சர் – துர்காதாஸ் உய்கே
நிலக்கரி அமைச்சகம்
- மத்திய அமைச்சர் – ஜி கிஷன் ரெட்டி