கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO -விடம் விரைவில் ஒப்புதல் பெறவேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்!
கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி அஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில் வெளிநாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையே தங்கள் நாடுகளுக்குள் அனுமதித்து வருகிறது.
எனவே கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் அந்த தடுப்பூசியை போட்டவர்கள் வெளிநாடு செல்வது சற்று சிக்கலாக உள்ளது. எனவே மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடி அவர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேற்குவங்கத்தில் ஆரம்பத்திலிருந்து மற்றும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தான் போடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காததால் கோவாக்சின் தடுப்பூசி போட்ட மாணவர்கள் பலரின் வெளிநாட்டு பயணம் தடைப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், கோவாக்சின் தடுப்பூசி போடாதவர்கள் சர்வதேச பயணிகள் எவ்வித சிரமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் விரைவில் ஒப்புதல் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.