கிரிக்கெட்டில் எது சிறந்த அணி? இந்தியாவா? பாகிஸ்தானா? – பிரதமர் மோடி பதில்.!
பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு கிரிக்கெட் நிபுணர் அல்ல, ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே எந்த அணி சிறந்தது என்பதை முடிவுகள் கூறுகின்றன என்றார்.

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், “இந்தியாவா? பாகிஸ்தானா? எது சிறந்த கிரிக்கெட் அணி?” என்ற கேள்விக்கு பிரதமர் மோடி நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
அவர் கூறியதாவது, “விளையாட்டின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி பேசும்போது, நான் ஒரு நிபுணர் இல்லை. அதில் நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில் முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு, எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியதாக, இந்தியாவே சிறந்தது என, மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
இதுவரை இருந்த சிறந்த கால்பந்து வீரராக யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்றும் மோடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அவர் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவை தனது காலத்தின் உண்மையான ஹீரோ என்று வர்ணித்தார்.
கடந்த காலத்தைப் பற்றிப் பேசினால், 1980களில், எப்போதும் தனித்து நிற்கும் ஒரு பெயர் மரடோனா தான். அப்போதைய தலைமுறையினருக்கு, அவர் ஒரு உண்மையான ஹீரோவாகக் காணப்பட்டார். இன்றைய தலைமுறையினரிடம் கேட்டால், அவர்கள் உடனே மெஸ்ஸியின் பெயரைச் சொல்வார்கள்” என்று தனக்குப் பிடித்த கால்பந்து வீரர் பற்றிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்