அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா முதல் முக்கிய வேலையாக பாஜக கொடுத்த வாக்குறுதியான மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார்.

Atishi and modi

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலின் போது கடந்த  ஜனவரி 31 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது துவாரகாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் டெல்லி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாஜக ஆட்சி அமைந்தவுடன் மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்து இருந்தார்.

ஆம் ஆத்மி கேள்வி 

இன்னும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி அறிக்கை ஒன்றை வெளியீட்டு கேள்வியை எழுப்பி இருந்தது. அதில் ” பெண்களுக்கான ரூ.2500 திட்டம் நிறைவேற்றப்படவில்லை. டெல்லியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மோடி ஜியின் உத்தரவாதத்தை நம்பினர், இப்போது அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக் கட்சி உங்களை நாளை பிப்ரவரி 23, 2025 அன்று இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க விரும்புகிறது. தில்லியின் லட்சக்கணக்கான பெண்களின் சார்பாக, உங்களின் பிஸியான கால அட்டவணையிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, எங்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன், இதன்மூலம் இந்தத் திட்டத்தில் உறுதியான நடவடிக்கைக்காக உங்கள் முன் எங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும்” என கூறியிருந்தார்கள்.

ரேகா குப்தா அதிரடி

ஆம் ஆத்மி கேள்வி எழுப்பிய சில நேரங்களில் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா முதல் வேலையாக பாஜக கொடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான ரூ.2500 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,டெல்லியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும் திட்டம் வரும் மார்ச் 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார்.

ஏற்கனவே, முதல்வராக பொறுப்பேற்ற விழாவில் பேசியபோது” எங்களுடைய கட்சி கொடுத்த வாக்குறுதிகள் அணைத்தையும் நிறைவேற்றுவது தான் என்னுடைய முதல் நோக்கம். முதலில் அதற்கான வேலைகளை தான் செய்வேன்” என பேசியிருந்தார். பேசியிருந்ததை போலவே தற்போது முதற்கட்டமாக மகளிருக்கு வழங்கப்படும் ரூ.2500 திட்டத்தை அறிவித்துள்ளது டெல்லி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்