நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.இந்த வேளையில் தான் நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது. ஆனால் இவரது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.ஆனால் இது ஒரு புறம் இருக்க தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார் நித்தியானந்தா.இது ஒரு பெரும் விவாதமாக வெடித்தது.
இந்த நிலையில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதாவது அவர் தாக்கல் செய்த வழக்கில்,நித்தியானந்தா மீதான வழக்குகளை ராம் நகர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக்கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,வருகின்ற 12-ஆம் தேதிக்குள் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை தெரிவிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.ஆனால் இன்று அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என 18-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ராம் நகர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்துள்ளது.
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…