ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில் அமலாக்கத்துறை அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், போலி ஆவணங்கள் மூலமாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் முதல்வர் ஹேமந்த் சோரன் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இதுவரை 9 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடைய, 7-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்த நிலையில், வீட்டிலேயே விசாரணை நடத்துமாறு ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஹேமந்த் சோரனின் வீட்டிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதன்பின், விசாரணை முழுமையாக முடியவில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு அடுத்தடுத்து இரண்டு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், ஜன.27ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், இந்த சம்மன்களுக்கு ஹேமந்த் சோரன் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த சென்றனர். அப்போது வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை எனவும் தகவல் வெளியானது.
காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ்
இதனால் ஹேமந்த் சோரனை தேடும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் இருந்து அவரது சொகுசு காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், ஹேமந்த் சோரன் எங்கே இருக்கிறார், அவரை காணவில்லை என்று பாஜகவின் எம்பி நிஷிகாந்த் துபே குற்றசாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பி ஓடுகிறார். தலைமைறைவாக இருக்கும் முதல்வர் எவ்வாறு மாநில மக்களை பாதுகாப்பார். ஹேமந்த் சோரன் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை தலைநகர் ராஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். அவரது மனைவி கல்பனா சோரனை ஜார்கண்டின் அடுத்த முதல்வராக்க உள்ளனர் என தெரிவித்தார்.
இருப்பினும், விசாரணை அமைப்பின் முன் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவர் என்றும் முதல்வர் தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி சென்றுள்ளார் எனவும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் பாஜக இவ்வாறு செயல்படுகிறது எனவும் குற்றசாட்டினார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…