இந்த இடங்களுக்கு செல்லும் போது முகமூடியை அணிந்திருக்க கூடாது- மத்தியபிரதேச அரசு
மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக்கடை, நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்ளுக்குள் நுழையும் போது முகக்கவசம் அணிந்திருக்க கூடாது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் வெளியே செல்லும் போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமுக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக்கடை, நகை கடன் வழங்கும் நிதி நிறுவனங்ளுக்குள் நுழையும் போது, நுழைவுவாயிலில் 30 நொடிகளுக்கு முகக்கவசம் அணிந்திருக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை முகமூடி கொள்ளையர்களிடம் இருந்து நிதி நிறுவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.