ஏற்கனவே பணம் செலுத்தி வாங்கிய பொருட்களை ஏன் உடைக்கிறீர்கள் ? சீன டிவியை உடைத்தவர்களுக்கு நெட்டீசன் கேள்வி
ஏற்கனவே பணம் செலுத்தி வாங்கிய பொருட்களை ஏன் உடைக்கிறீர்கள் ? சீன டிவியை உடைத்தவர்களுக்கு நெட்டீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது .அந்தவகையில் தற்போது லடாக்கில் சீனா மற்றும் இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே மேலும் பிரச்சினையை அதிகப்படுத்தியுள்ளது.தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் பதற்றம் அதிகமாகவே உள்ளது.இதனிடையேதான் இந்தியாவில் சீனா பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகம் எழுந்துள்ளது.மேலும் சீன பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் #BoycottChineseProducts என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டாகியது.
இந்நிலையில் தான் குஜராத் மாநிலம் சூரத்தில் பால்கனியில் இருந்து சீன நிறுவனத்தின் டிவியை கீழே எறிந்தனர்.அப்பொழுது கீழே இருந்தவர்கள் டிவியை கால்களால் உடைத்து எதிர்ப்பினை பதிவு செய்தனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியாகியது. இந்த வீடியோ பதிவிற்கு நெட்டீசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது ,ஏற்கனவே சீன பொருட்களை பணம் செலுத்தி வாங்கிய நிலையில் தற்போது அதை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
(When you break Chinese products AFTER purchasing them)
*Le China – pic.twitter.com/Y8dbRvr8sC
— Prasanta Dutta (@prasantadu07) June 17, 2020