ஹார்ட்ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் – மத்திய அரசு
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாட்ஸ்பாட் பகுதிகள் பல சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் கடைசியாக கொரோனா வைரஸ் 4 வாரங்களுக்கு யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
அதாவது ஹாட்ஸ்பாட் பகுதியில், இன்று ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது என்றால், மே 10 ம் தேதி வரை யாருக்கும் தொற்று ஏற்படக் கூடாது. அப்படி இருந்தால் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இந்தியாவில் இதுவரை 170 ஹாட்ஸ்பார்ட் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.