‘நாங்கள் 80%, நீங்கள் 17%’: CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ மிரட்டல்.!
- கர்நாடகாவில் நேற்று குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோம்சேகர் ரெட்டி பங்கேற்றார்.
- இந்த தேசத்தில் நாங்கள் 80% சதவீதம் இருக்கிறோம், நீங்கள் 17% சதவீதம் தான் இருக்கிறீர்கள் என பேசினார்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் சிறுபான்மையினருக்கு எதிரானது என்ஆர்சி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் எனக் கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த விதத்திலும் இந்த முடிவு எதிரானது இல்லை, எந்தவிதத்திலும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நேற்று குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு நான் சிறிய எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த தேசத்தில் நாங்கள் 80% சதவீதமும், நீங்கள் 17% சதவீதமும் இருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள் என ஆவேசமாக பேசினார்.
“We are 80%, you are just 17%. Imagine what will happen to you if we fight back. Beware. You shud be mindful of this if you want to live in our country,” @BJP4Karnataka MLA Somashekhara Reddy warns Muslims over #CAAProtests in Ballari
@NewIndianXpress @santwana99 pic.twitter.com/4elE14ViIx
— Anusha Ravi Sood (@anusharavi10) January 3, 2020
மேலும் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் நாட்டில் தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்று எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும், இது நம்முடைய நாடு, இந்த நாட்டில் நீங்கள் வாழ வேண்டுமென்றால், இந்த தேசத்தின் பாரம்பரியங்களை மதித்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படுவீர்கள். இந்த சட்டத்துக்கு எதிராகச் சென்றால், இது உங்களுக்கு நல்லதாக இருக்காது.
இதனிடையே, நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினால் செல்லலாம், எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் உங்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்துக்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும், நீங்கள் எதிரியைப்போல் நடந்தால், நாங்கள் எதிரிபோல் நடக்க வேண்டியது இருக்கும். பின்னர் காங்கிரஸ் கட்சியை நம்பாதீர்கள். அதில் இருப்பவர்கள் ஏராளமானோர் முட்டாள்கள். அவர்களை நம்பி சாலைக்கு வந்து போராட்டம் நடத்தாதீர்கள் என பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி தெரிவித்தார்.