பிரதமர் மோடி கார் மீது செருப்பு வீச்சு.? வாரணாசியில் பரபரப்பு.!

PM Modi Road show in Varanasi

வாரணாசி: பிரதமர் மோடி உத்திர பிரதேசம் மாநிலத்திற்கு நேற்று வந்திருந்த போது அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 18 2024) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பிஎம் கிசான் சமேலான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி எழுதும் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாயை விடுவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பின்னர் சாலை மார்க்கமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமரின் கார் வருவதை கண்ட பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் என பலர் இரு பக்கமும் பலத்த வரவேற்பு அளித்தனர்.

அந்த சமயம் பிரதமர் சென்ற கார் மீது ஓர் செருப்பு விழுந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியது. அந்த வீடியோவில் கார் மீது இருந்த செருப்பை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எடுத்து வேறு இடத்தில் தூக்கி எறிவது போல இருந்தது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list