பீகாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி உதவவில்லை – ராகுல் காந்தி

ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோடி அரசு உதவி செய்ததா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகாரில் காங்கிரஸ் ,ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே இன்று பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மோடி அரசு உதவி செய்ததா? என்று கேள்வி எழுப்பினார்.குறிப்பாக பீகாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களிலிருந்து விரட்டப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உதவவில்லை.மத்திய அரசு ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. இது இந்தியாவில் சிறு வணிகங்களை மேலும் பாதித்தது. கடமையில் தங்கள் உயிர்களை இழந்த ஜவான்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறினார், ஆனால் வீரர்கள் தியாகியாக இருந்தபோது பிரதமர் என்ன செய்தார் என்பது கேள்வி”:
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025