இந்தியா கூட்டணிக்கு தலைவராகும் மம்தா? ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ்!
இந்தியா கூட்டணியை தலைமை ஏற்க மம்தா விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கு தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத் பவார் ஆதரவளித்தனர்.
டெல்லி : கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியும் நேரடியாக களம் கண்டன. இதில் NDA கூட்டணி வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து வந்த ஹரியானா தேர்தல், மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, உள்ளிட்ட மாநில சட்டசபைகளிலும் அரசியல் சறுக்கல்களை எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ். இதனால் மற்ற இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சற்று அதிர்ப்தியில் இருந்தனர். இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தான் தலைமையேற்று ஒருங்கிணைத்து வருகிறது.
இப்படியான சூழலில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது. முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜி, தான் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க விரும்புவதாகவும், தன்னால் அதனை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் தனக்கும் பங்கு உண்டு என்றும், தற்போது அதனை வேறு ஒருவர் வழிநடத்தி வருகின்றனர். அவர்களால் அதனை முறையாக வழிநடத்த முடியவில்லை என்றே கூறினார்.
இந்தியா கூட்டணியில் தலைமைக்கு எதிரான இந்த அதிருப்தி குரலுக்கு தற்போது ஆதரவு குரலும் ஒலித்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத்பவார் இன்று கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” மம்தா நாட்டில் ஒரு திறமையான தலைவர். இந்தியா கூட்டணிக்கு தலைமை பற்றி கருத்து சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அவர் கட்சி சார்பாக இந்த முறை அனுப்பிய எம்.பி.க்கள் கடின உழைப்பாளிகள். இந்தியா கூட்டணிக்கு தலைவராக