டிசம்பர் மாதம் துவங்கவுள்ள நிலையில், வழக்கமான வாங்கி விடுமுறை நாட்களை தவிர்த்து நாடு முழுவதிலும் எப்பொழுதெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் அணைத்து ஞ்சயிற்றுக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். இந்த டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதிலுமுள்ள அரசு மட்டும் அனைத்து தனியார் வங்கிகளுக்கும் வழக்கமான விடுமுறையை தவிர்த்து எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி மாநில பதவியேற்பு நாளை முன்னிட்டு நாகலந்திலும், சுதேச நம்பிக்கை நாளை முன்னிட்டு அருணாச்சல பிரதேசத்திலும் விடுமுறை. டிசம்பர் 3 ஆம் தேதி கனகதாச ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகாவிலும், உலக ஊனமுற்றோர் தினத்திற்காக திரிபுராவிலும், புனித சவேரியார் திருநாளை முன்னிட்டு கோவாவில் விடுமுறைக்கு கொடுக்கப்படுகிறது. டிசம்பர் 5 ஆம் தேதி ஷேக் முகமது அப்துல்லாவின் பிறந்தநாளுக்காக ஜம்மு காஷ்மீரில் விடுமுறை. டிசம்பர் 12 இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வழக்கமான விடுமுறை.
யூ சோசோ தாமினின் நினைவுநாள் முன்னிட்டு டிசம்பர் 18 ஆம் தேதி மேகாலயாவிலும், குரு காசிதாஸ் ஜெயந்திக்காக சண்டிகரில் விடுமுறை. டிசம்பர் 19-இல் கோவாவில் விடுதலை நாளுக்காகவும், பஞ்சாபில் பகவான் குரு தேக் பகதூர் ஜி நினைவு நாளுக்காகவும் விடுமுறை. டிசம்பர் 25 நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை. டிசம்பர் 26 நான்காவது சனிக்கிழமைக்காகவும், டிசம்பர் சிக்கிமில் தாமு லோசா பண்டிகைக்காகவும், மேகாலயாவில் யூ கியாங் நங்பா விழாவுக்காகவும் விடுமுறை. டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு விழாவுக்காக மணிப்பூரிலும் விடுமுறை கொடுக்கப்படுகிறது.
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…