சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? – வெளியான தகவல்!

Default Image

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31க்குள் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜூலை 21க்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அன்று ஈத் பண்டிகை என்பதால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12-ஆம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்ய வேண்டும் என கல்வி வாரியம் பள்ளிகளுக்கு கூறியிருந்தது. ஆனால், தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 தேர்வு முடிவுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பதால், ஜூலை 31 சனிக்கிழமைக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு 2021 முடிவுகளை ஜூலை 31க்குள் அறிவிப்பதாக சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தேர்வு முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக சிபிஎஸ்இ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresults.nic.in இல் நேரடி இணைப்பு மூலம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிஜிலாக்கர், ஐவிஆர்எஸ், எஸ்எம்எஸ் மற்றும் உமாங் செயலி மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறியலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CBSE 10, 12ஆம் வகுப்பு முடிவுகளை காணும் செயல்முறையை இங்கே காணலாம் : cbseresults.nic.in

  • சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திக்கு செல்லவும் – ரிசல்ட் (Result) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதாவது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் பக்கம்.
  • பத்தாம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக்கொள்ள “மேல்நிலைப் பள்ளி தேர்வு” (Secondary School Examination) என்பதை கிளிக் செய்யவும்.
  • பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகளை பார்க்க “சீனியர் மேல்நிலைப் பள்ளி” (Senior Secondary School Examination) கிளிக் செய்யவும்.
  • உங்கள் ரோல் எண், தேர்வு மையம் எண், பள்ளி மற்றும் அட்மிட் கார்டு ஐடி விவரங்களை உள்ளிட்டு- சமர்ப்பி (Submit) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்றும், அதை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்