16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகள் தடை: வாட்சப்
ஏப்ரல் மாதத்தில் 16.6 லட்சம் தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்தது வாட்சப் நிறுவனமான மெட்டா.
ஏப்ரல் 2022ல் இந்தியாவில் இருந்து 16.6 லட்சத்திற்கும் அதிகமான தவறான வாட்சப் கணக்குகளை தடை செய்ததாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 க்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மார்ச் மாதத்தில் வாட்சப் நிறுவனம் 18 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதத்தில் வாட்ஸ்அப் 844 புகார்களைப் பெற்றுள்ளது. இதில் 123 வாட்சப் கணக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று மார்ச் மாதத்தில் 597 புகார்களை வாட்சப் பெற்றுள்ளது. இதில் 74 கணக்குகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர், “பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1.6 மில்லியன் (1,666,000) தவறான கணக்குகளை வாட்சப் தடை செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக, நாங்கள் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம், தரவு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் செயல்முறைகளில், எங்கள் தளத்தில் எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முதலீடு செய்துள்ளோம் என்று நிறுவனம் கூறியுள்ளது.