வாட்ஸ் அப் முடக்கம், மெட்டா விளக்கம் தர வேண்டும்-தொழில்நுட்ப அமைச்சகம்
வாட்ஸ்அப் செயலிழந்த காரணம் குறித்து நீண்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு மெட்டாவிடம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
செவ்வாய் கிழமை அன்று ஏறக்குறைய இரண்டு மணி நேரம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்அப் செயலிழந்தது. அந்த செயலிழப்புக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மெட்டாவிடம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
மெட்டா தனது அறிக்கையை, அரசாங்கத்தின் முக்கிய இணையப் பாதுகாப்பு நிறுவனமான சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (ICERT) க்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்தியாவில், இணையத்தில் ஏதேனும் இடையூறு ஏற்படும் போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(MeitY) நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் செயல்.
செவ்வாயன்று இந்தியாவில் வாட்ஸ்அப் செயலிழப்பு நண்பகலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த செயலிழப்பு நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மற்றும் குரல் அழைப்புகள் கூட முடங்கின.
வாட்ஸ்அப் பிசினஸ் மற்றும் வாட்ஸ்அப் பே போன்ற முக்கியமான சேவைகளுடன் ஸ்டேட்டஸ் அம்சமும் இந்த இரண்டு மணிநேரத்தில் செயல்படத் தவறிவிட்டது. சேவைகள் மீட்டெடுக்கப்பட்ட பிறகு, மெட்டா எந்தவித விரிவான விவரங்களையும் வழங்கவில்லை.
ஒரு அறிக்கையில், “எங்கள் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையின்CERT விளைவாக இந்த குறுகிய செயலிழப்பு ஏற்பட்டது, இப்போது அது தீர்க்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தனர்.