WhatsApp: வாட்ஸ் அப்பில் பணப்பரிவர்த்தனை..மேலும் 6 கோடி பயனர்களுக்கு அனுமதி!
வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு.
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், கூகுள் பே, ஃபோன் பே, paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், வாட்ஸ் அப்பில், வாட்ஸ் அப் பே என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்த பின், டிஜிட்டல் பேமண்ட்ஸ் பயன்பாடுகள் மேலும் அதிகரித்தது.
அதன்படி, குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஏற்கனவே, 40 மில்லியன் (4 கோடி) பயனர்களுக்கு அனுமதிக்க NPCI என்ற யுபிஐ நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், வாட்ஸ் அப்பிற்கான (WhatsApppay) UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள கூடுதலாக 60 மில்லியன் அதாவது 6 கோடி பயனர்களை அதிகரித்து நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ்அப் தனது 100 மில்லியன் (10 கோடி) பயனர்களுக்கு சேவையை விரிவுபடுத்த முடியும் என NPCI அறிவித்துள்ளது. NPCI என்பது இந்தியாவில் டிஜிட்டல் முறையில் சில்லறை கட்டணங்கள் மற்றும் தீர்வு அமைப்புகளை இயக்குவதற்கான ஒரு அமைப்பாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில்லறை கட்டண முறைகளில் புதுமைகளைக் கொண்டுவருவதில் NPCI கவனம் செலுத்துகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 2008-இல் ஒரு அமைப்பாக இணைக்கப்பட்டது.
முழுமையான டிஜிட்டல் சமூகமாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோட்பாட்டை மேம்படுத்தும் வகையில், குறைந்த செலவில், நாடு தழுவிய அணுகலுடன் பாதுகாப்பான கட்டண தீர்வுகளை இது எளிதாக்குகிறது. இது இந்தியாவில் சில்லறை விற்பனை மூலம் பணம் செலுத்தும் முறையை மாற்றியுள்ளது. RuPay அட்டை, உடனடி கட்டண சேவை (IMPS), ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் போன்ற கட்டண தயாரிப்புகள் (UPI), பணத்திற்கான பாரத் இடைமுகம் (BHIM), BHIM ஆதார், தேசிய மின்னணு டோல் சேகரிப்பு (NETC) Fastag) மற்றும் பாரத் பில்பே ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
We are pleased to share that we have given approval to an additional sixty (60) million users on UPI for WhatsApp.
To know more visit: https://t.co/MVOPKPMV6g pic.twitter.com/Ezqrd7pQMJ— NPCI (@NPCI_NPCI) April 13, 2022