மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸாப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது.
இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியவில்லை என்று வாட்ஸாப் பயனர்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.செயலிழப்பு கண்டறிதல் இணையதளம் DownDetector ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு WhatsApp வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்த சமூக ஊடக பயனர்களும் செய்திகளை அனுப்ப முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் மற்றும் பிற தளங்களில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக்குடன் பயனர்கள் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…