புதிய தனிநபர் கொள்கை குறித்து ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்,இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,வாட்ஸ்-அப்பின் புதிய தனிநபர் கொள்கையானது இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கும்,விதிகளுக்கும் எதிரானது.எனவே,அந்த கொள்கையை திரும்ப பெற வேண்டும்.மேலும்,தனது அறிவிப்புக்கு 7 நாட்களுக்குள் வாட்ஸ்-அப் பதிலளிக்க வேண்டும் என்றும், நிறுவனத்தின் பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் நிறுவனத்தின் மீது எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியது.ஆனால்,வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து,டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்,வாட்ஸ்-அப்பின் புதிய தனிநபர் கொள்கைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
இதனையடுத்து,டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது,புதிய தனி நபர் கொள்கைகளை கடந்த மே 15 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப் படுத்துவதாக அறிவித்தாலும்,இதுவரை எவருடைய கணக்கும் நீக்கப்படவில்லை என்றும்,இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கும் விதிகளுக்கும் இணங்குவதாகவும் வாட்ஸ்-அப் தரப்பில் கூறப்பட்டது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…