மம்தா பானர்ஜியையும் விட்டுவைக்காத வாட்ஸப் ஹேக்கிங் உளவு பார்க்கும் மத்திய அரசு
வாட்ஸப் ஒட்டுக்கேட்கள் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் .
நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக நாம் நினைக்கும் நேரத்தில் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் வாட்ஸப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் உலகத்தையே அதிரவைத்துள்ளது .
இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது ஆனால் அந்த நிறுவனமோ நாங்கள் அரசாங்கத்திடம் மட்டும்தான் இதை பகிர்ந்துள்ளோம் என்று கூறி வருகிறது .
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ” என்னுடைய தகவல் ஒட்டுகேட்கப்படுவதாகவும் இதற்க்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் பிரதமர் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் .