அமெரிக்காவின் டைம் பத்திரிகை வாட்ஸ் அப்-பாஜக உறவை அம்பலப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தார் .மேலும் அதன் மூலம் பாஜக போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றது. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
ராகுலின் இந்த கருத்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராகுலின் கருத்துக்கு பதில் அளிக்கையில்,தனது கட்சியில் உள்ளவர்களிடமே செல்வாக்கை பெற முடியாத அவர் , உலகம் முழுவதும் பாஜக கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பிடிபட்டவர், தற்போது எங்களை கேள்வி கேட்பதா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையின் பதிவை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,அமெரிக்காவின் டைம் பத்திரிகை வாட்ஸ் அப்-பாஜக உறவை அம்பலப்படுத்தியுள்ளது. 40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், அதன் மூலமாக பணம் செலுத்துவதற்கு மோடி அரசின் ஒப்புதல் தேவைப்படும் என்பதால் அதனை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், வாட்ஸ்அப் மீது பாஜகவுக்கு ஒரு பிடி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…