வாட்ஸ் அப்-பாஜக  உறவு அம்பலம் – ராகுல் காந்தி ட்வீட்

Default Image

அமெரிக்காவின் டைம் பத்திரிகை வாட்ஸ் அப்-பாஜக  உறவை அம்பலப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாஜக கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தார் .மேலும்  அதன் மூலம் பாஜக போலி செய்திகளையும், வெறுப்புகளையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றது. இறுதியாக இதுதொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

ராகுலின்  இந்த கருத்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராகுலின் கருத்துக்கு பதில் அளிக்கையில்,தனது கட்சியில் உள்ளவர்களிடமே செல்வாக்கை பெற முடியாத அவர் , உலகம் முழுவதும் பாஜக  கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பிடிபட்டவர், தற்போது எங்களை கேள்வி கேட்பதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் டைம்  பத்திரிக்கையின் பதிவை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,அமெரிக்காவின் டைம் பத்திரிகை வாட்ஸ் அப்-பாஜக  உறவை அம்பலப்படுத்தியுள்ளது. 40 கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்,  அதன் மூலமாக பணம் செலுத்துவதற்கு மோடி அரசின் ஒப்புதல் தேவைப்படும் என்பதால் அதனை பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால், வாட்ஸ்அப் மீது பாஜகவுக்கு ஒரு பிடி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
basit ali about Ravichandran Ashwin
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps