ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை தடை செய்தது வாட்ஸ்அப்!

Published by
பாலா கலியமூர்த்தி

வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடை.

வாட்ஸ்அப்பின் மாதாந்திர அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 420 புகார்களை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. இதன் மூலம் 20,70,000 கணக்குகளைத் தடை செய்வதற்கு தானியங்கி அல்லது மொத்த செய்திகளின் முறையற்ற பயன்பாடு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில், தானியங்கி (automated messaging) செய்திகளில் ஈடுபடும் 95% கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஒரு இந்திய கணக்கு +91 தொலைபேசி எண் மூலம் அடையாளம் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வாட்ஸ்அப் 420 பயனர்களிடம் இருந்து புகார்களை பெற்றுள்ளது. இதில் கணக்கு ஆதரவுக்காக 105, தடை முறையீடுகளுக்கு 222, மற்ற உதவிக்கு 34, தயாரிப்பு ஆதரவுக்காக 42 மற்றும் பாதுகாப்புக்காக 17 ஆகியவை அடங்கும்.

இதுகுறித்து கூறுகையில், வாட்ஸ்அப் தனது ஆதரவு பக்கத்தில், புகார் சேனல் மூலம் பயனர் புகார்களைப் பெறும்போது, மேசேஜிங் செயலி மூலம் தீங்கு விளைவிக்கும் நடத்தைகளைத் தடுக்க கருவிகள் மற்றும் ஆதாரங்களை பயன்படுத்துகிறது. இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கை வாட்ஸ்அப் மூலம் எடுக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் அல்லது தேவையற்ற செய்திகளை அளவில் அனுப்புவதிலிருந்து கணக்குகளைத் தடுப்பதே எங்கள் முக்கிய கவனம். அதிக அல்லது அசாதாரணமான செய்திகளை அனுப்பும் கணக்குகளை அடையாளம் காண மேம்பட்ட திறன்களை நாங்கள் பராமரிக்கிறோம். எங்களை அணுகும் பெரும்பாலான பயனர்கள் தங்கள் கணக்கைத் திரும்பப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்

முன்னதாக, வாட்ஸ்அப் நாற்பத்தாறு நாட்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்ததாக தெரிவித்திருந்தது. இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் தவறாக முயற்சிக்கும் மில்லியன் கணக்கான கணக்குகளை தடை செய்துள்ளது. இந்தியாவில் தானியங்கி அல்லது மொத்தமாக செய்தி அனுப்புவதில் ஈடுபடும் கணக்குகளில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

40 minutes ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

2 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

3 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

4 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

5 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

5 hours ago