வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? – நெட்டிசன்களின் சுவாரஸ்யமான பதில்கள் இதோ!

Default Image

இந்தியாவில் வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,ட்விட்டர் பயனர்கள் அளித்துள்ள பதில்களை கீழே காண்போம்.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.அப்போது 2022- 2023 ஆம் நிதியாண்டில் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும், இந்தியாவின் முதன்மை வங்கியாக விளங்கும் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்த டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும்,இந்த டிஜிட்டல் கரன்சி வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி உருவாக்கும்.அந்த விதிமுறைகளை  விரைவில் வெளியிடப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார்.அதே சமயம்,தற்போது உலகெங்கும் பரவி காணப்படும் பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுடன்,டிஜிட்டல் கரன்சியை ஒப்பிட முடியாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இந்தியாவின் டிஜிட்டல் நாணயத்திற்கான சாத்தியமான பெயரைக் கண்டறிய நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது.அதன்படி,ஷிவ் அரூர் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் இந்தியாவில் வரவிருக்கும் டிஜிட்டல் கரன்சிக்கு என்ன பெயரிடுவீர்கள்? என்று எழுப்பிய கேள்விக்கு,பொருளாதார நிபுணரும் நவம் கேபிட்டலின் நிறுவனருமான ராஜீவ் மந்திரி,செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமான லக்ஷ்மி தேவியின் அடையாளமாக ‘லக்ஷ்மிகாயின்’ என்ற பெயர் வைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஷஷாங்க் சேகர் ஜா, மைதாலியில் ரூபாயைக் குறிக்கும் ‘பே’ என்ற பெயரை வைக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து,ட்விட்டர் பயனர் ஒருவர் கூறுகையில்,பிரதான் மந்திரி டிஜிட்டல் ரூபாய் யோஜனா (PMDRY) என பெயர் வைக்கலாம் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும்,சிவாஜி மகாராஜ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாணயங்கள் சிவராய் என்று அழைக்கப்பட்டன. அதை மீண்டும் கொண்டு வரலாம் என்று ட்விட்டர் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,டிஜிட்டல் இந்திய நாணயம் சந்தையில் நுழைவதற்கான அறிவிப்பு கிரிப்டோ ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்