இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அக்டோபரில் தொடங்கும் என உலகெங்கிலும் உள்ள சிறந்த நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் நடத்திய ஆய்வில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலமான செய்தி நிறுவனமாகிய ராய்ட்டர்ஸ் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும், எப்போது தொடங்கும் என்பது குறித்து உலகெங்கும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் என 40க்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டுள்ளது. ஜூன் 3-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நிபுணர்களிடம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட நிபுணர்களின் 21 நிபுணர்கள் அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் உருவாகும் என கூறியுள்ளனர்.
மேலும் 12 பேர் செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்கும் என தெரிவித்துள்ளனர். மற்ற அனைவரும் இந்த ஆண்டு நவம்பரில் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிவித்துள்ள நிலையில், எப்படியாயினும் கொரோனா இரண்டாம் அலையை விட மூன்றாம் அலை சிறப்பாக கையாளப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்ததாகவும் இதற்கு இடைப்பட்ட காலங்களை கணக்கெடுக்கையில் 100 அல்லது 120 நாட்களுக்குள் அடுத்த அலை தொடங்கலாம் எனவும் பல நிபுணர்கள் கூறியுள்ளனராம்.
மேலும், இரண்டாம் அலையின் போது தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை இருந்ததாகவும், தற்போது மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளால் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகாரணங்களுக்கான பற்றாக்குறை இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் குறைவாகவே இருக்கும் எனவும், அதற்க்கு காரணம் தற்போது போடப்படும் தடுப்பூசிகள் தான்.
இதன் மூலம் ஓரளவு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வொருவரின் உடலிலும் இருக்கும் என இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மூன்றாம் அலையல் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனும் கருத்துக்கு பதிலளித்த நிபுணர்கள் பலர், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாதது கூட இதற்க்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…