போர்க்களங்களில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க வேண்டும்.! பிரதமர் மோடி .!
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார்.அப்போது வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுக்கிழமை வெளியே வரவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார்.
22 ம் தேதி கொரோனா வைரஸுக்கு எதிராக சோதனை ஓட்டமாக இருக்கும். வருகின்ற 22-ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் வாயிலில் இருந்து அனைவரும் கைதட்டியோ அல்லது மணியோசை எழுப்பியோ மருத்துவர்களுக்கும், சேவை பணிபுரிவோருக்கும் நன்றி தெரிவிக்கவேண்டும்.
நாட்டின் நன்மைக்காக வரும் 22ஆம் தேதி ஊரடங்கை நாம் பின்பற்றுவோம், இதனை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். மேலும் போர்க்களங்களில் இரவு நேரங்களில் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என கூறினார்.