என்னைப் போன்ற ஏழைகள் என்ன செய்யமுடியும்: கண் கலங்கிய சோமாட்டோ ஊழியர் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் முன்னிலையில் சோமாட்டோ நிறுவனம் உள்ளது.சமீபத்தில் மத்திய பிரதேசத்தை சார்ந்த அமித் சுக்லா என்பவர் இந்நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.
உணவை டெலிவரி செய்பவர் இந்து அல்லாதவர் என்பதால் அந்த உணவை அமித் சுக்லா ரத்து செய்து உள்ளார். அதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் கூறிய அவர் ” நான் உணவு கொடுப்பவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.ஆனால் அவர்கள் டெலிவரி செய்பவரை மாற்றவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு சோமாட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்” என பதில் அளித்தது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு உபேர் ஈட்ஸ் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #ZomatoUninstalled ,#BoycottUberEats என்ற ஹேஷ்டேக்களை பயன்படுத்தி அமித் சுக்லாக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவு செய்து வந்தனர். மேலும் பலர் உபேர் ஈட்ஸ் மற்றும் சோமாட்டோவை அன் இன்ஸ்டால் செய்த ஸ்கிரீன் ஷாட்களை பதிவிட்டனர்.
ஆனால் ட்விட்டரில் சோமாட்டோ நிறுவனத்திற்கு ஆதராக பலர் கருத்து தெரிவித்தும் . அந்த உணவை ரத்து செய்த அமித் சுக்லாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதை தொடந்து அந்த உணவை டெலிவரி செய்த ஃப்யர்ஸ்-க்கு இதுபோன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் விஷயங்கள் எதுவும் தெரியாத நிலையில் இது பற்றி ஒருவர் ஃப்யர்ஸிடம் கூற அதற்கு ஃப்யர்ஸ் கூறுகையில் , இந்த சம்பவம் தனக்கு வேதனை தருவதாகவும், என்னைப் போன்ற ஏழைகள் என்ன செய்யமுடியும் , இதுபோன்ற துன்பங்களை பொறுத்து கொண்டுதான் போகவேண்டும் என கண்கலங்கி கூறினார்.
இந்நிலையில் இந்த உலகில் நாம் பயன்படுத்தும் உணவு ,உடை ,போன்றவற்றை தயாரிப்பது யாரு ?என்பது நமக்கு தெரியாது. அப்படி இருக்கையில் உணவில் மதத்தை பார்ப்பது தவறு பலர் என கூறி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)