எந்த இடம்னு சொல்லுங்க ? அமித்ஷா விடுத்த சவாலை ஏற்ற அகிலேஷ், மாயாவதி

Published by
Venu
  • குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் ஒன்றை விடுத்தார்.
  • சவாலை ஏற்கத்  தயார் என்று அகிலேஷ் யாதவ், மாயாவதி தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே மத்திய அரசு இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பேசினார்.அவர் பேசுகையில்,இந்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகிறது.இந்த சட்டம்  குறித்து என்னுடன் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி,  பகுஜன் சமாஜ் கட்சி  தலைவா்  மாயாவதி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி  உள்ளிட்டோர் தயாரா என்று சவால் விடுத்தார்.

இந்த சவாலுக்கு பதில் அளிக்கும் விதாமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில்,  எந்த இடத்திலும், எந்த தளத்திலும் விவாதம் நடத்த தயார் என்று தெரிவித்துள்ளார்.சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை குறித்து பாஜக தலைவர்களுடன் விவாதம் நடத்த நான் தயார்.பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பா.ஜ.க தலைவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

14 mins ago
2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

30 mins ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

48 mins ago

பெட்டிக்கடை தேன் மிட்டாய் இனி வீட்டிலே செய்யலாம்..!

சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

4 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

4 hours ago