ஜிகா வைரஸ் என்றால் என்ன…? இந்த வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை என்ன…?

Published by
லீனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவின் தாக்குதலில் இருந்தே இன்னும் முழுமையாக வெளியே வராத நிலையில், கேரளா மாநிலத்தில் ‘ஜிகா வைரஸ்’ என்ற புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிகா வைரஸ் என்றால் என்ன?

ஜிகா வைரஸானது பெரும்பாலும், ஏடிஸ் இன கொசுக்களால் தான் பரவுகிறது. இந்த கொசுக்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக கடிக்கிறது. ஏடிஸ் கொசுக்கள் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலைப் பரப்புகின்றன.

இந்த வைரஸ் பாதிப்பானது கர்ப்பிணி பெண்களை தாக்கும் போது, அவர்களை மட்டுமல்லாது அவர்களின் கருவையும் தாக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மைக்ரோசெபலி மற்றும் பிற பிறவி குறைபாடுகளுடன் பிறக்கக்கூடும். இதன் காரணமாக, குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு உள்ளிட்ட கர்ப்பத்தின் பிற சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். மேலும், ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள், தங்களது துணைக்கும் கூட இந்த வைரஸை பரப்ப வாய்ப்புள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸின் அறிகுறிகள்

கொசுக்களால் பரவக்கூடிய இந்த நோய்க்கான அறிகுறி என்னவென்றால், காய்ச்சல், சொறி, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல் வலி அல்லது தலைவலி ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். ஜிகா வைரஸ் நோயானது 3-14 நாட்கள் வரை ஒரு மனிதனுக்கு இருக்கும் என்றும், 2-7 நாட்கள் அதன் அறிகுறிகள் நீடிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், ஜிகா வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகள் காணப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸுக்கான சிகிச்சை 

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுகுறித்து கூறுகையில், ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டும். நன்கு ஒய்வு எடுக்க வேண்டும். நீரிழப்பை தவிர்க்க அதிகமாக திரவ பானங்களை அருந்த வேண்டும். காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago