சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு? – டி.கே. சிவகுமார்

DK Shivakumar Congress

காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக சித்தராமையா ஏன் முதல்வராக கூடாது என டிகே சிவகுமார் பல்டி.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையிலும், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என இழுபறி நீடித்து வந்தது.

இதில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் இடையே போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை தனித்னியே டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனால், விரைவில் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, புதிய முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் மே 20ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரபல ஆங்கில ஊடகத்துக்கு டிகே சிவகுமார் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக சித்தராமையா ஏன் முதல்வராக கூடாது என தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், முடிவு ஏற்பட்டதை டிகே சிவகுமாரின் கருத்து உறுதிப்படுத்தியது. நேற்றுவரை முதலமைச்சர் பதவி கேட்டு டி.கே. சிவகுமார் வந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று இப்படி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர், துணை முதல்வரை கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது என்றே கூறலாம். டிகே சிவகுமாரின் இந்த பேட்டியின் மூலம் சித்தராமையா முதல்வர், தான் துணை முதல்வர் என்பதை உறுதி செய்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்