இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன, அறியலாம் வாருங்கள்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டே சென்றாலும் புதிதாக தொற்றுகள் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்றால் 9,140,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 133,773 பேர் உயிரிழந்துள்ளனர், 8,561,444 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 44,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 510 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 445,095 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டுமானால் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.